அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து 188,825,000 ரூபா பணத்தைப் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, சந்தேக நபர் நேற்று (15) குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.