தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு சிரியாவில் சுவைடா மாகாணத்தில் ட்ரூஸ் மற்றும் பெடுவின் தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பு மோதலை கட்டுப்படுத்த சிரியா அரசு ராணுவ துருப்புகளை அனுப்பி உள்ளது.
ட்ரூஸ் அமைப்பினர் மீது சிரிய ராணுவம் அத்துமீறுவதாக இஸ்ரேல் ராணுவம் வான்வழித்தாக்குதலை நடத்தியது.