நான் சிறைச்சாலையில் இருந்த 54 நாட்களே, என் வாழ்க்கையில் சந்தோசமாக இருந்த காலமாகும். சிறையில் எனக்கு கிடைத்த நண்பர்களை பிரிந்தது தொடர்பில் கவலையடைகிறேன். ஹாவட் பல்கலைக்கழகம் சென்றாலும், புத்தக கல்வியை மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சமுதாயக் கல்வியை பெற்றுக் கொள்ள முடியாது. எனது 46 வயதில் 25 வருட அரசியல் வாழ்க்கையில் பெற்றுக் கொள்ள முடியாத வாழ்க்கை அனுபவங்களை அறிந்து கொண்டே வெளியில் வந்துள்ளேன். சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களின் ஈடுபடும் கும்பல்களின் பிரதானிகள், போதை கடத்தல், முதலாளிகளுடன் ஒன்றாக சாப்பிட்டு படுத்துறங்கினேன்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க, பிணையில் விடுக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.