இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட சேவையை வழங்கிய எஸ்.எச். முபாரக் (Subair ஹமீத் முபாரக்) இம்மாதத்துடன் (ஜுலை) தனது அரச சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றுள்ளார்.
1989 செப்டம்பர் 12ஆம் திகதி பொலிஸ் துறையில் இணைந்த இவர், தனது பணிக்காலத்தில் இலங்கை ஜனாதிபதி அதி மேதகு ரணசிங்க பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலர்களாக அமர்த்தப்பட்டு அதிலிருந்து சிறிது காலம் சென்ற பின்பு களுத்துறை கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாமில் பயிற்சியை முடித்துவிட்டு அதன் பின்னர் இலங்கை பொலிஸ் கல்லூரியில் தனது பயிற்சியை முடித்து விட்டு கொழும்பு அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பாதுகாப்பு கடமையில் மரணிக்கும் வரை ஜனாதிபதி அவர்கள் மே மாதம் 1ம் திகதி மரணிக்கும் வரைக்கும் அவருக்கு பணிக்கு சேவையாற்றி விட்டு பிராந்தியங்களில் பொது பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டார்.
கடுகுருந்த விசேட அதிரடிப்படை முகாம், களுத்துறை பொலிஸ் கல்லூரி பயிற்சி வகுப்புகளை முடித்தார். இவர் சேவையின் இறுதியில் கொழும்பு தெற்கு பகுதியில் கடமை செய்துவிட்டு தொடர்ச்சியாக அம்பாறை மாவட்டம் மகாஓயா , சென்றல் கேம்ப் , கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஏறத்தாழ 16 ஆண்டுகள் சேவையாற்றியதோடு பெரும் குற்றப்பிரிவு , நிர்வாகப்பிரிவு என கடமையாற்றி அண்மையில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சமுக நிர்வாகப்பிரிவு மற்றும் Record Room போன்ற கடமைகளை வழக்கு தொடர்பான பொறுப்புக்களில் செயற்பட்டு தனது சேவையை நிறைவு செய்துள்ளார்.
அவரது சேவையில் நேர்மை, நம்பிக்கை, கடமை உணர்வு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.