ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars செய்தி நிறுவனம் அறிவித்துள்ளதை அல்ஜஸீரா வெளியிட்டுள்ளது. 16-06-2025 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் சிறு காயங்களுக்கு உள்ளானார்.
உயர்மட்ட தேசிய பாதுகாப்பு கவுன்சில் தூதுக்குழுவை குறிவைத்து இஸ்ரேல் 6 ஏவுகணைகள் அல்லது குண்டுகளை வீசியது. தப்பிக்கும் பாதைகளைத் தடுப்பதையும், துண்டிப்பதையும் இஸ்ரேலிய தாக்குதல் நோக்கமாகக் கொண்டது. மின் தடை இருந்தபோதிலும், பெஷேஷ்கியனும், அதிகாரிகளும் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்ட அவசர வெளியேற்றத்தின் வழியாக தப்பிக்க முடிந்தது. ஜனாதிபதி பெஷேஷ்கியனுக்கு காலில் காயம் ஏற்பட்டது, பாராளுமன்றத் தலைவர்கள், நீதித்துறைத் தலைவர்கள் உட்பட பலர் லேசான காயங்கள் ஏற்பட்டன.