ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கார் விபத்துக்குப் பிறகு வேறொரு குழுவுடன் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நபரின் மனைவி கூறும் போது,
”என் கணவர் நெலும் பிளேஸிற்கு சென்ற போது, அந்த நபர்கள் என் கணவர் தான் விபத்தை ஏற்படுத்தியாக நினைத்தனர்.
என் கணவர் எதுவும் செய்யவில்லை. எந்த காரணமும் இல்லாமல் அவரை தாக்கினர்.
ஹெல்மெட்டுகளால் அவரது தலையிலும் கையிலும் தாக்கியுள்ளனர்.. தாக்கியவர் பியூமியின் மகன் காவிங்க.
அவருடன் சுமார் 20 பேர் இருந்ததாக எனது கணவர் கூறினார்” என்றார்.