Date:

ஹஜ் யாத்திரிகர்களை பதிவு செய்தல் – 2026

ஏ.எஸ்.எம்.ஜாவித்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் உம்ரா குழுவுடன் இணைந்து 2026 ஆம் ஆண்டு (ஹிஜ்ரி 1447) ஹஜ் கடமையினை நிறைவேறறுவதற்கு உத்தேசித்துள்ளவர்களி;டமிருந்து விண்ணப்பங்களை கோருகின்றது.

இதனடிப்படையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக Online மூலம் http://muslimaffairs. Info/ hajjapplications 26/create) தங்களது பதிவினை 2025.07.03 திகதியிலிருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இதுவரை திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது என்பதையும் அறியத் தருகின்றோம்.
புதிதாக பதிவினை மேற்கொள்பவர்கள் 2026 ஆம் ஆண்டு தமது ஹஜ் பயணத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பதிவுக் கட்டணமாக மீளளிக்கப்படாத தொகையான 5000.00 ரூபாவினை MRCA Hajj Account No 2327593 Bank of Ceylon , Hyde Park Branch என்ற வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு பற்றுச் சீட்டினை திணைக்களத்திற்குச் சமர்ப்பித்து தங்களது ஹஜ் பயணத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பாக பதிவுக் கட்டணமாக மீளளிக்கப்படாத 5000.00 ரூபாவினை மேலே குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக் கணக்கிலக்கம் தவிர்ந்த ஏனைய வங்கிக் கணக்கிலக்கங்களுக்கு பணம் வைப்பிலிடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
2025ம் ஆண்டு ஹஜ் பயணத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பதிவுக்கட்டணமாக ரூபா 5000.00 இனை செலுத்தி பின்னர் ஹஜ் பயணத்தினை மேற்கொள்ள முடியாமல் போனவர்கள் 2026 ஆம் வருடம் ஹஜ் பயணத்தினை மேற்கொள்ள உத்தேசித்திருப்பின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தளத்தின் பதிவினை மேற்கொள்ளுமாறும்;, பதிவுக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவர்களுக்கு 2026 வருடம் ஹஜ் பயணத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களத்தின் பணிபப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவிக்கின்றார்.
மேலதிக விபரங்களுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 0112667901 தொலைபேசி இலக்கத்தினூடாக ஹஜ் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வௌ்ளம்பிட்டியவில் வீடொன்றுக்கு முன்னால் கைக்குண்டு

வெள்ளம்பிட்டிய, டொனால் பெரேரா வீதியில் உள்ள அல்பாவில் வீடமைப்பு தொகுதியில், வீடொன்றுக்கு...

2026 இல் சிறந்த 25 நகரங்களில் யாழ்ப்பாணம்

உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான...

அஸ்வெசும தரவு: உலக வங்கி பிரதிநிதிகள் அதிரடி

"அஸ்வெசும" சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுக்கும்போது புதுப்பிக்கப்பட்ட மற்றும்...

மோந்தா புயல் சூறாவளியாக வலுப்பெறுகிறது

வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. மோந்தா என்ற இந்த புயல் நாளை காலை சூறாவளியாக வலுப்பெற்று, மாலையில் ஆந்திரப் பிரதேச கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோந்தா புயல் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்று பலத்த மழை பெய்யும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.