ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் சிறப்பு வைத்தியர் மஹேஷி விஜேரத்னவின் மகள் ஹேமலி விஜேரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் உதவி இயக்குநர் மற்றும் விசாரணை அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் புதன்கிழமை (09) அன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, 500,000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க உத்தரவிட்டார்