இலங்கை அணியின் வீரர் குசல் மெண்டிஸ் ஒருநாள் போட்டிகளில் தமது ஆறாவது சதத்தைப் பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி பல்லேகல மைதானத்தில் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 39 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுள்ளது.
அந்த அணி சார்பில் தமது ஆறாவது சதத்தை பெற்ற குசல் மெண்டிஸ் 102 ஓட்டங்களுடன் துடுப்பாடி வருகிறார்.
அவருடன் இணைந்து துடுப்பாடி வரும் அணியின் தலைவர் சரித் அசலங்க 50 ஓட்டங்களை பெற்று தொடர்ந்து ஆடுகளத்தில் உள்ளார்