323 கொள்கலன்களை கொட்டிய சம்பவத்தின் பின்னணியில் பல மூளையாகச் செயல்படுபவர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்றுவரும் கூட்டத்தொடரின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போது அவர் இவ்வாறு கூறினார். கொள்கலன்களை கொட்டிய சம்பவம் தொடர்பாக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்