களுபோவில விகாரை வீதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக நேற்று (7) ஒரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மல்வானையைச் சேர்ந்த 21 வயதுடையவரே துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் ஜூன் 15 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.