சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் (ஐசிசி) தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சஞ்சோக் குப்தாவை நியமிப்பதாக அறிவித்துள்ளது.
சஞ்சோக் குப்தா தற்போது ஜியோஸ்டார் ஃபார் ஸ்போர்ட்ஸ் அண்ட் லைவ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
உலகளாவிய ஊடகங்கள், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு ஊடகங்களிலும் அவர் மிகவும் மதிக்கப்படும் நபராக உள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டார், இதன் மூலம் ஐசிசியின் இரு முக்கிய பதவிகளையும் இந்தியர்கள் வகிக்கின்றமை விசேடம்சமாகும்.
ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஏழாவது நபர் சஞ்சோக் குப்தா ஆவார்