கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
நாளை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு துண்டிக்கப்படவுள்ளதாக அந்த சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவ நகர சபைப் பகுதிகள், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டுநாயக்க, மினுவங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளின் ஒரு பகுதியிலும் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த உப மின் நிலையத்தால் விநியோகிக்கப்படும் நீர் விநியோக குழாய்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகம் துணடிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.