காலி, மாத்தறை மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (05) இரவு 7 மணிமுதல் இரவு 11 மணி வரை நடத்தப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 457 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
286 சந்தேக நபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் 171 பேர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டனர் என்றும் அவர்களில் நீதிமன்ற பிடியாணையில் தேடப்பட்ட 65 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
‘ஐஸ்’ போதைப்பொருளை வைத்திருந்ததற்காக 26 பேர் மீதும், கஞ்சா வைத்திருந்ததற்காக 28 பேர் மீதும் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
போதையில் வாகனம் ஓட்டியதற்காக 66 பேர் உட்பட மொத்தம் 649 பேருக்கு எதிராக போக்குவரத்து தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நடவடிக்கையின் போது 28 மோட்டார் சைக்கிள்கள் உட்பட , 77 வாகனங்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த சுற்றிவளைப்பில் 1,365 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், 3,288 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கையில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படைகளின் உறுப்பினர்கள் உட்பட 1,584 பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.