2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (க.பொ.த. சாதாரண தர) பரீட்சையின் முடிவுகள் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்றும், விடைத்தாள் மதிப்பிடும்பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்ட சாதாரண தரப் பரீட்சையில் மொத்தம் 478,182 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். அவர்களில் 398,182 பேர் பாடசாலை மாணவர்கள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
முடிவுகளை எவ்வாறு பார்க்கலாம்
வெளியிடப்பட்டதும், விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளை பின்வரும் உத்தியோகபூர்வ வலைத்தளங்கள் வழியாக நிகழ்நிலையில் பார்க்கலாம்:
http://www.doenets.lk
http://www.results.exams.gov.lk
முடிவுகளைப் பெற, விண்ணப்பதாரர்கள் இரு தளங்களிலும் வழங்கப்பட்ட தேடல் புலத்தில் தங்கள் குறியீட்டு எண்ணை உள்ளிட வேண்டும்.
முடிவுகள் வெளியிடப்படும் போது இந்த வலைத்தளங்கள் அதிக நெரிசலை சந்திக்க நேரிடும் என்பதால், நிலையான இணைய இணைப்பைப் பயன்படுத்தவும் பொறுமையாகவும் இருக்கவும் பரிட்சார்த்திகள் அறிவுறுத்தப்படுகின்றனர்