Date:

நேபாளத்தில் புதியவகை கொரோன தோற்றால் 35 பேர் பாதிப்பு!

நேபாள நாட்டில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்றால், 7 நாட்களில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தின் 31 மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்டோரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் அந்நாட்டில் புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய வகை கொரோனாவுக்கு முதல்முறையாக கடந்த ஜுன் 24 ஆம் திகதி ஒருவர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3 பேர் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டின் எல்லையின் 17 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அளுத்கம தர்கா நகரில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு: சந்தேக நபர் கைது

இரும்புக் கம்பியால் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கத் தயாரான சந்தேக நபரைக் கட்டுப்படுத்த,...

ரணில் டிஸ்சார்ஜ்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பிணை மனு நிராகரிப்பு: சஷீந்திரவுக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக...