பொரளை, ஹல்கஹகும்புரவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மோட்டார் சைக்கிள் சாரதி, மற்றொரு நபர் நேற்று (4) இரவு கைதுசெய்யப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொரளை மற்றும் வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 18 மற்றும் 19 வயதுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஆறு சந்தேக நபர்கள் தற்போது பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.