சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து நேற்று (03) மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவு மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே இவ்விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது