Date:

’ஈரான் உடனான போரில் அமெரிக்கா சாதிக்கவில்லை’

இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேல் – ஈரான் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக, இந்த போர் தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது கருத்துகளை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 

போலியான சியோனிச (இஸ்ரேல்) ஆட்சியை வென்றதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், சியோனிச ஆட்சி இஸ்லாமியக் குடியரசின் தாக்குதல்களால் கிட்டத்தட்ட வீழ்த்தப்பட்டு நசுக்கப்பட்டது.

 

அமெரிக்காவை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துகள். அமெரிக்கா நேரடியாகப் போரில் நுழைந்தது. ஏனெனில் அது அவ்வாறு செய்யவில்லை என்றால், சியோனிச (இஸ்ரேல்) ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அந்நாடு உணர்ந்தது. அந்த ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில், அமெரிக்கா போரில் நுழைந்தது. எனினும், எதையும் அமெரிக்கா சாதிக்கவில்லை.

 

அமெரிக்காவின் முகத்தில் இஸ்லாமிய குடியரசு ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உதெய்த் விமானத் தளத்தைத் தாக்கி ஈரான் சேதப்படுத்தியது. பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க மையங்களை ஈரானால் அணுக முடியும் என்பதும், அது அவசியம் என்று கருதும் போதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம். இதுபோன்ற நடவடிக்கை எதிர்காலத்தில் மீண்டும் நிகழலாம். ஏதேனும் தாக்குதல் நடந்தால், எதிரி நிச்சயமாக அதிக விலை கொடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...

எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

இலங்கைக்குத் தேவையான எரிபொருள் இருப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத்,...