Date:

Breaking ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

“ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்” என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

“அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் தாக்குதல் நடத்தப்பட்டன.

அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை.

இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் “பங்கர் பஸ்டர்” ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மாணவர்களுக்கு இனி பாட புத்தகங்கள் இல்லை

அடுத்த கல்வியாண்டில், தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்...

வௌிநாடு செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இலங்கை அரசாங்கத்தின் புதிய திட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பயணிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு...

இந்திய- இலங்கை பிரதமருக்கு இடையில் சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர்...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...