Date:

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்….

நாட்டின் இயற்கை செல்வங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல், சமூகத்தை வலுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் சுற்றுலாத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, “The Gathering of Giants” எனும் ஆசியாவின் ‘யானைகளின் சந்திப்பு ஹபரணையில் அவதானிப்பதற்கான திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் விலைமதிப்பற்ற வன செல்வங்களை பாதுகாக்கும் முன்னோடி நிகழ்ச்சியான “The Gathering of Giants” எதிர்வரும் ஜூலை 25 முதல் 27 வரை சினமன் ஹபரணை ஹோட்டல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Cinnamon Nature Trails மற்றும் செலான் வங்கியின் மதிப்புமிக்க கூட்டாண்மையின் கீழ் Cinnamon Hotels & Resorts மூலம் ஏற்பாடு செய்யப்படும் இந்த சிறப்பு நிகழ்ச்சி, நாட்டின் இயற்கை செல்வங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாத்தல், சமூகத்தை வலுப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் சுற்றுலாத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அண்மையில் Cinnamon Grand Colombo ஹோட்டலின் Atrium மண்டபத்தில் இடம்பெற்றது.

மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வு, மின்னேரியா மற்றும் கவுடுல்ல தேசிய பூங்காக்களில் நூற்றுக்கணக்கான காட்டு யானைகளின் வருடாந்த இடப்பெயர்வை கொண்டாடுகிறது.

உலகின் 6ஆவது சிறந்த வனவிலங்கு காட்சியாக Lonely Planet இனால் அங்கீகரிக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய யானைக் கூட்டம் என்ற நிகழ்வில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், பயணிகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கதை கூறுவோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து Cinnamon Hotels & Resorts இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமனம் பெறவுள்ள ஹிஷான் சிங்ஹவன்ச கருத்து தெரிவிக்கையில்,

தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக The Gathering of Giants நிகழ்ச்சியை நடத்துவது, இலங்கையின் வனவிலங்கு பாரம்பரியத்தை பாதுகாப்பதில் எமது ஆழமான மற்றும் நீடித்த அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

இந்த நிகழ்வு வெறும் கவனிப்பிற்கு அப்பாற்பட்டது. இது விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொறுப்புள்ள சுற்றுலாவை ஊக்குவித்தல் மற்றும் நிரந்தர மாற்றத்திற்காக சமூகங்களை ஒன்றிணைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நாங்கள் யார், எதற்காக நிற்கிறோம் என்பதை தீர்மானிக்கும் எமது 35க்கும் மேற்பட்ட நடைமுறையில் உள்ள மனிதநேய மற்றும் சூழல் பாதுகாப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று.’ என தெரிவித்தார்.

வனவிலங்குகள் பற்றிய தகவல்கள், செயல்முறை பயிற்சிப்பட்டறைகள் மற்றும் நாட்டின் சிறப்பு வனவிலங்குகளை காணும் உல்லாச பயணங்கள் போன்றவற்றில் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளக்கூடிய 3 நாட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியானது சிறப்பு நிபுணர்களால் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய காரணியாக கருதப்படுவது யானைகளாகும். இலங்கையின் வனவிலங்குகளின் பரந்த பன்முகத்தன்மையை கொண்டாடும் இந்த நிகழ்ச்சி, ஆசியாவின் முதன்மை வனவிலங்கு காட்சியான மிகப்பெரிய ஆசிய யானைக் கூட்டம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் என்ற அடிப்படை நிகழ்ச்சிகளுடன் இணைந்து, சிறுத்தைகள் மற்றும் புலம்பெயர் பறவைகள் பற்றிய பயிற்சிப்பட்டறைகளையும் உள்ளடக்கியுள்ளது.

The Gathering of Giants இற்கான Cinnamon Hotels & Resorts உடனான கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஆசிரி அபயரட்ன,

“Cinnamon Hotels & Resorts மற்றும் Cinnamon Hotels & Resorts உடனான எமது தொடர்ச்சியான கூட்டாண்மை இலங்கையின் இயற்கை பாரம்பரியத்தை முழுமையான மற்றும் பாதுகாப்பு மையமாக கொண்ட அனுபவங்கள் மூலம் முன்னிறுத்தும் ஒரு பொதுவான நோக்கத்தில் அமைந்துள்ளது.

The Gathering of Giants இன் வெற்றி இந்த இக்கூட்டணியின் சக்தியை எடுத்துக்காட்டுகிறது. எமது அட்டைதாரர்களுக்கு உலகின் மிகப்பெரிய வனவிலங்கு காட்சிகளில் ஒன்றான ஆசியாவின் மாபெரும் யானைக் கூட்டத்தைப் பாரவையிடுவதற்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்கிறது. Cinnamon Hotels & Resorts உடன் எதிர்காலத்தில் புதிய திட்டங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயணங்களுடன் இந்த முன்னேற்றத்தை தொடர்வதில் பெருமிதம் கொள்கிறோம்.’ என தெரிவித்தார்.

இலங்கையின் கலாச்சார முக்கோணத்தில் அமைந்துள்ள Cinnamon Lodge Habarana மற்றும் Cinnamon Habarana Village விருந்தினர்களுக்கு இயற்கை காட்சிகளை நெருக்கமாக காண வாய்ப்பளிக்கிறது. பாதுகாப்பு உணர்வுள்ள விருந்தோம்பல் சேவையுடன் இது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் மூன்று சிறப்பு பேச்சாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், பங்கேற்பாளர்களுக்கு தகவல்களை ஆராய்வதற்கும், விவாதங்களில் பங்கேற்பதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Noah Falklind – BBC இன் விருது பெற்ற வனவிலங்கு புகைப்படக்கலைஞரான இவர், இலங்கையின் அரிதான சிறுத்தைகளின் வாழ்க்கை பற்றிய கவர்ச்சிகரமான ஆய்வான Living with Leopards என்ற ஆய்வை முன்வைப்பார். இதற்காக அவர் மேற்கொண்ட பணிகள் மற்றும் அரிய நுண்ணறிவுகளை பயன்படுத்துவார்.

டாக்டர் பிரிதிவிராஜ் பெர்னாண்டோ- இலங்கையின் முன்னணி யானை நிபுணரும், பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான பிரிதிவிராஜ் பெர்னாண்டோ, மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையிலான சிக்கலான உறவு மற்றும் இடத்தைப் பகிர்ந்து கொள்ளும் உத்திகள் பற்றி வெளிப்படுத்தும் Elephants & Coexistence மூலம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்.

பேராசிரியர் சம்பத் செனவிரத்ன – கொழும்பு பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பறவையியல் வல்லுநரான பேராசிரியர் சம்பத் செனவிரத்ன, புலம்பெயர் பறவைகளின் மர்மமான பயணங்கள் மற்றும் உலகளாவிய பறவை வழித்தடமாக நாட்டின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பற்றி ஆராயும் The Avian Migration to Sri Lanka நிகழ்ச்சியை நடத்துவார்.

Sri Lanka Resorts இன் பிராந்திய உதவித் தலைவர் யோஹான் அஸ்கான் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

‘Cinnamon Lodge Habarana மற்றும் Habarana Village உள்ளடங்கிய சினமன் ஹபரன ஹோட்டல் வளாகம் ஒரு ஹோட்டலுக்கு அப்பாற்பட்ட சிறப்பு இடமாக குறிப்பிடலாம். வளமான சுற்றுச்சூழல் வளங்களால் நிறைந்த அங்கு The Gathering of Giants உடன் இணைந்து அழகான வனவிலங்குகளை காணும் வாய்ப்பை உருவாக்கும் அதே வேளையில், மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையில் நீண்டகால உறவை ஏற்படுத்தி நெறிமுறை மற்றும் கல்வி சார்ந்த சந்திப்பை உறுதிப்படுத்த நாங்கள் செயல்படுகிறோம்.’ என்றார்.

செலான் வங்கியுடனான தொடர்ச்சியான கூட்டாண்மை மூலம் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அறிமுகப்படுத்தப்பட்ட SEYEG25 விளம்பர குறியீட்டைப் பயன்படுத்தி 10% சிறப்பு தள்ளுபடி பெற செலான் credit மற்றும் debit அட்டை உரிமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இயற்கை பற்றி அதிகரித்து வரும் ஆர்வம், கல்வி மற்றும் நோக்கத்துடன் மறக்க முடியாத பாதுகாப்பு நிகழ்ச்சியாக அமையும் இந்த The Gathering of Giants நிகழ்விற்கான ஆசனங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டவை என்பதால் உங்கள் ஆசனத்தை முன்கூட்டியே பதிவு செய்யுங்கள்.

இந் நிகழ்ச்சி ஜூலை மாதம் 25 தொடக்கம் 27 வரை  Cinnamon Lodge Habarana வில் நடைபெறும். முன்பதிவுகளுக்கு இலக்கம்  +94 11 2161 161ஐ தொடர்பு கொள்ளவும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எம்.பி பதவியை இராஜினாமா செய்த பிரதியமைச்சர் ஹர்ஷண

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...

கெஹெலியவின் மகளுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா...

ஹட்டன் கண்டி பிரதான வீதியில் அதிரடி சோதனை

ஹட்டன் - கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை...

இஸ்ரேலின் கொடூரங்களை தட்டிக்கேட்க முடியாத கோழைத்தன அரசு – ரிஷாட் சபையில் கடும் சீற்றம்!

அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிந்து, இஸ்ரேலின் அடாவடித்தனத்தை ஆதரிக்கும் போக்கில் செயற்படுவதை அரசாங்கம்...