Date:

கொழும்பு மாநகர சபை மேயர் தெரிவுக்கான தேர்தல் இன்று

கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பாலித நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரதான ஒரு கட்சியால் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியாததால் மாநகர சபையின் அதிகாரத்தை வழங்குவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

2023 ஆம் ஆண்டிலிருந்து கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவி வெற்றிடமாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி 48 இடங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும், பொதுஜன பெரமுன 5 இடங்களையும் வென்றிருந்தன.

117 இடங்களைக் கொண்ட கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட, ஒரு கட்சி குறைந்தது 59 இடங்களைப் பெற வேண்டும்.

இதனடிப்படையில், கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை உருவாக்குவது தொடர்பாகப் பிரதான கட்சிகளுக்கிடையே சமீபத்திய நாட்களில் கடும் போட்டி நிலவி வருகிறது இந்தநிலையிலேயே, இன்று கொழும்பு மாநகர சபையின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானின் 200 இலக்குகளை 24 மணி நேரத்தில் தாக்கிய இஸ்ரேல்

கடந்த 24 மணி நேரத்தில், ஈரான் அரசின் 200 இற்கும் மேற்பட்ட...

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...