Date:

ஈரான் தாக்குதலில் இலங்கைப் பெண்கள் இருவர் காயம்

இஸ்ரேல் முழுவதும் ஈரானிய ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இதனால் இலங்கைப் பெண்கள்  இருவர் காயமடைந்துள்ளனர்.

டெல் அவிவ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் நகருக்கு தெற்கே உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஒருவர், அதிகாலை 03:30 மணியளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் போன்று உலுக்கியதை அடுத்து, குடும்பத்தினருடன் வெளியேற்றப்பட்டுள்ளார்.

பேட் யாமில் அதிகாலை 04:00 மணியளவில் நடந்த ஒரு சம்பவத்தில், மற்றொரு இலங்கைப் பெண்ணின் வலது கையில் கண்ணாடி விழுந்து காயமடைந்துள்ளார்.

இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டார, காயமடைந்தவர்களிடம் நேரில் சென்று பேசியதாக கூறியுள்ளதுடன் இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், மேலும் நாட்டில் உள்ள அனைத்து இலங்கையர்களும் உடனடியாக தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...