Date:

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் கிண்ணத்தை சுவீகரித்தது தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் ​உள்ள லோட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அதன்படி, தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாப்பிரிக்கா அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 207 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதன்படி, 282 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா அணி 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அந்த அணி சார்பில் Aiden Markram 136 ஓட்டங்களையும் அணித்தலைவர் Temba Bavuma 66 ஓட்டங்ளையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Mitchell Starc 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி தென்னாப்பிரிக்கா அணி முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Justin அமெரிக்காவுடன் இனிப் பேசி அர்த்தமில்லை -ஈரான்

இஸ்ரேலின் “அநாகரிகமான” தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது...

அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்...

வாழைச்சேனையில் வசமாக சிக்கிய மோசமான ஜோடி; பொலிசார் வரும்வரை வீட்டுக்குள் வைத்துபூட்டிய மக்கள்!

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கணவனும்,...

ஈரான் – இஸ்ரேல் போர் : இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை அடுத்து குறித்த பிராந்தியத்தில் வசிக்கும் அல்லது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373