சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை நேற்று(22) நாடாளுமன்றில் வைத்துத் தெரிவித்தார்.
இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.
இந்த சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் கட்டுப்படுத்தப்படுமே தவிர, மக்களின் உரிமைகள் மீறப்படமாட்டாது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.
Date:
சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள் பரப்பப்படுவதற்கு எதிராக வரப்போகும் புதிய சட்டம்!
