Date:

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

அதன்படி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராகவும், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை…

அம்பாறையில் திடீரென உருவானது எரிபொருள் வரிசை... மத்திய கிழக்கில் பதற்றம் என்பதால் எரிபொருள்...

Breaking சவூதி வாழ் இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...

மத்திய கிழக்குக்கான பத்து விமானங்களை ரத்து

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால், பிராந்தியத்தில் அதிகரித்து வரும்...

மத்திய கிழக்குக்கான சகல விமான சேவைகளும் இரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதைக் காரணம்...