Date:

ரில்வினுக்கும் சீனா மாகாண ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிற்கும், சீனாவின் ஜெஜியாங் மாகாண ஆளுநர் லியு ஜீக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் பிரதான பொதுமக்களின் வேலைவாய்ப்பு மண்டபத்தில் திங்கட்கிழமை (9) அன்று நடைபெற்றது.

 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் சீனாவுக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு, மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நட்புறவு குறித்து குறிப்பாக கலந்துரையாடப்பட்டது.

 

இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த சீனாவும் ஜெஜியாங் மாகாணமும் எதிர்காலத்தில் வழங்கக்கூடிய பங்களிப்புகள் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டன.

 

இதன்போது, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தீப்தி வாசலகே, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மபிரிய விஜேசிங்க, ஜெஜியாங் மாகாண துணை ஆளுநர் லு ஷென், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச துறையின் தெற்காசிய பிராந்தியத்தின் பணிப்பாளர் ஜெனரல் பான் சியு பின் மற்றும் ஜெஜியாங் மாகாணத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் குழுவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியுடன் மாலைத்தீவு சென்ற ஏழு பேரின் வேலை போனது

ஜனாதிபதி அனுரகுமாரவுடன் மாலைதீவு சென்று திரும்பும்போது, கட்டுநாயக்க  விமான நிலையத்தில் Duty...

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு நிபந்தனை பிணை

முன்னாள் பொருளாதார மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்டங்கள் பிரதி அமைச்சர் எஸ்.எம்....

திருட்டு பொருட்களுடன் சிக்கிய சந்தேக நபர்கள்

கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில்,...

பாரியளவில் சிகரெட்டுகள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள்...