Date:

டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில்…

5 முதல் 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே டெங்கு தொற்றாளர்களில் அதிகளவானோர்  என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய டெங்கு மற்றும் சிக்கன்குனியா நோய் தொடர்பில் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்குவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாடசாலைகளுக்குக் கள ஆய்வுகளை மேற்கொள்ளும் போது டெங்கு பெருக்கம் உள்ள இடங்கள் அடையாளங் காணப்பட்டால் பாடசாலை அதிபரே பொறுப்பேற்க வேண்டும்.

மேலும், காய்ச்சல், வாந்திபேதி, கை மற்றும் கால் வலி என்பவை ஏற்பட்டால் உடனே வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் என வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்தார்.

அத்துடன், சிக்கன்குனியா வைரஸ் தொற்றினால் ஏற்படும் உடல் வலிகளைக் குறைப்பதற்காக வலிநிவாரண மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பெரசிடமோல் மாத்திரைகளை உட்கொள்ளுமாறும் வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

19 கிரிக்கெட் வீரர்கள் உடற்தகுதி தேர்வில் தோல்வி

நிறைவடைந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை வீரர்கள் தொடர்ச்சியாக...

Breaking இஸ்ரேல் இரசாயன ஆலை மீது ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்!  நச்சுக்கசிவு அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்! 

"வெறும் குண்டுவீச்சு மட்டுமல்ல... இது ஒரு இரசாயனப் பேரழிவுக்கான எச்சரிக்கை!"  தெற்கு...

எரிபொருள் ஏற்றுமதியை தடை செய்கிறது ரஷ்யா

அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள...

ஆட்பதிவு திணைக்களத்தின் விசேட அறிவுறுத்தல்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பு தற்போது சீரமைக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம்...