Date:

கொவிட் தொற்றால் 180,000 சுகாதார பணியாளர்களை இழந்துள்ளோம் – WHO கணிப்பு

சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக 80,000 முதல் 180,000 வரையிலான சுகாதார பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கணிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 காரணமாகச் சுகாதார ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதானி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus) தெரிவித்துள்ளார்.

குறித்த மரணங்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளன.

இதற்கிடையில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் கொரோனா நோய்த் தொற்று நிலைமை அடுத்த ஆண்டுவரை நீடிக்கும் என மற்றுமொரு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ரீதியாக 135 மில்லியன் சுகாதார பணியாளர்கள் சேவையாற்றுகின்றனர்.

119 நாடுகளில் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சர்வதேச ரீதியாக ஐந்தில் இரண்டு பேர் மாத்திரமே முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

எனினும் இந்த எண்ணிக்கை செல்வந்த நாடுகளுக்கு இடையில் வேறுபடுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

செல்வந்த நாடுகளில் 10 பேரில் 8 சுகாதார சேவையாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றபோதிலும் ஆப்பிரிக்க நாடுகளில் 10 பேரில் ஒரு சுகாதார சேவையாளருக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட்ட பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவி ஹனான் அமின்

சபாநாயகரினால் கௌரவிக்கப்பட் திறமைகளை வெளிக்காட்டிய பாராளுமன்ற உத்தியோகத்தர்களினது பிள்ளைகளைக் கௌரவித்து புலமைப்பரிசில் மற்றும்...

ஹரிணி சீனாவுக்கு…

பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க...

மீண்டும் இலங்கையில் தேர்தல்

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

இன்று கடையடைப்பு! யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலை..

வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டம் இன்றையதினம் மேற்கொள்ளப்படும் என்று...