தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத்தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான நேரடி அணுகல்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ் உரிமம் பெற்ற தரப்பினரிடமிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்ற உரிமம் பெற்ற 800 முகவர்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதில் ஏதேனும் சிக்கல் நிலை காணப்படுமாயின் 24 மணிநேரமும் செயற்படக்கூடிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Date:
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு!
