Date:

மதீனாவில் ஹஜ் கடமைக்கு சென்ற சம்மாந்துறை உபதவிசாளர் உயிரிழந்துள்ளார்!

புனித ஹஜ் கடமைக்காக மக்காசென்ற சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளரும் சம்மாந்துறை வலய முன்னாள் சமாதான இணைப்பாளரும் பிரபல சமூக செயற்பாட்டாளருமான ஆதம்பாவா அச்சிமொகமட்( வயது 65) மதீனாவில் சுகயீனமுற்று இன்று (2) திங்கட்கிழமை திடீரென காலமானார்.May be an image of 1 person, money and text
நைfப் என அன்பாக அழைக்கப்பட்ட அவர் தம் மனைவி எம்.ஜ.தஸ்லிமாவுடன் ஹஜ் கடமைக்காக மக்காசென்றிருந்த வேளையில் மதீனாவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவரது பூதவுடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.கல்விப் பணியில் 29 வருடகாலம் நிறைபணியாற்றிய சம்மாந்துறை வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தரான ஆதம்பாவா அச்சிமொகமட் 2020 இல் தனது 60வது வயதில் ஓய்வுபெற்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சம்மாந்துறைத்தொகுதியின் அமைப்பாளரான இவர் சம்மாந்துறை பிரதேசசபையின் உபதவிசாளராக சேவையாற்றியவர். ஜனாப் அச்சிமொகமட் அரசியலுக்கு அப்பால் சமய கலாசார சமுகத்துறைகளிலும் சமுதாயத்தில் பல கௌரவமான பதவிகளை வகித்துவருபவராவார்.
இவர் ஆரம்பக்கல்வியை பெண்கள் பாடசாலையிலும் உயர்கல்வியை முஸ்லிம் மத்திய கல்லூரியிலும் பயின்று 1992இல் ஆசிரியராக நியமனம்பெற்றார். 2008இல் வலய சமாதானக்கல்வி உத்தியோகத்தராக பதவியுயர்வுபெற்று ஓய்வுபெறும்வரை சிறப்பானபணியாற்றினார். இடையில் இருவருடங்கள் சுனாமி உணவு திட்டத்திலும் மேலதிகபணியாற்றினார்.
இதேவேளை கல்விப்பணிக்கு அப்பால் சமய சமுக அரசியல் துறைகளிலும் தடம்பதித்துள்ளார்.
அரசியலில் இயல்பாகவே நாட்டம்கொண்ட இவர் 2011இல் உள்ளுராட்சிசபைத்தேர்தலில் போட்டியிட்டு சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு மக்கள்பணியாற்றினார்.
இரண்டாவது தடவையும் அவர் தெரிவாகினார்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டில் சபையின் உபதவிசாளராகவிருந்த வெ.ஜெயச்சந்திரன் இராஜினாமாச்செய்ததையடுத்து சபையின் உபதவிசாளராக சேவையாற்றிவந்தார்.
சம்மாந்துறை கபூரியா பள்ளிவாசல் தலைவராகவும் பொன்னன்வெளி விவசாயஅமைப்பின் தலைவராகவும் சம்மாந்துறை பொலிஸின் சிவிலபாதுகாப்புக்குழுத்தலைவராகவும் மேலும் பல அமைப்புகளில் பதவிகளை வகித்துவந்த முக்கியஸ்தராவார்.
சம்மாந்துறையைச்சேர்ந்த ஆதம்பாவா குழந்தையும்மா தம்பதிகளின் புதல்வரான இவருக்கு 3சகோதரிகளும் 3சகோதரர்களுமுள்ளனர். இவர் எம்.ஜ.தஸ்லிமாவை இல்லறத்தில் இணைத்து 6பிள்ளைகளின் தந்தையாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வடக்கு – கிழக்கு ஹர்த்தால் குறித்து அரசின் நிலைப்பாடு!

அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து மேற்கொள்ளப்படும் திரிபுவாதங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்களால்...

நீரில் மூழ்கி இதுவரை 257 பேர் பலி

நாடு முழுவதும் இந்த ஆண்டு (2025) இதுவரை நீரில் மூழ்கிய சம்பவங்களில்...

மூன்றாம் தவணை நாளை ஆரம்பம்

2025ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார்...

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...