கொழும்பு மாநகர சபை உட்பட 14 மாநகர சபைகள், 24 நகர சபைகள், 140 பிரதேச சபைகள் ஆகியவற்றுக்கு மேயர் மற்றும் தலைவர்கள் நியமிக்கப்படவில்லை. கொழும்பு மாநகர சபை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும், ஏனைய கட்சிகள் 35 ஆசனங்களையும் கொழும்பு மாநகர சபையில் பெற்றுக்கொண்டுள்ளன. இவ்வாறான நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் சிக்கல் நிலை தோற்றம் பெற்றுள்ளது.
28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் , 275 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 339 உள்ளுராட்சிமன்ற அதிகார சபைகளுக்கான வாக்கெடுக்கு 2025.05.06 ஆம் திகதியன்று நடைபெற்றது.
பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சரினால் 2025.02.17 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் மாகாண சபைகளின் பதவி காலம் இன்று முதல் ஆரம்பமாகிறது.

 
                                    







