பொரளை மகசின் சிறைச்சாலைக்குள் ஹெராயின், ஐஸ் மற்றும் புகையிலை வைத்திருந்ததற்காக சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் பொரளை அவசரகால நடவடிக்கை குழுவில் பணியாற்றும் சிறைச்சாலை காவலர் ஆவார்.
பொலிஸார் அவரிடம் இருந்து 16,112 மில்லிகிராம் ஹெராயின், 12,924 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 73,855 மில்லிகிராம் புகையிலை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர் சிறைச்சாலைக்குள் இந்த போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்தாரா என்பதை கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






