Date:

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபி – நாமல் ராஜபக்க்ஷ கண்டனம்

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமைக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து இதற்கான எதிர்ப்பை அரசாங்கம் வெளியிட வேண்டும் எனவும் அவர் தமது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவில் நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்தும் தாம் கவலையடைவதாக நாமல் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான இனப்படுகொலை கதையை கனடா ஊக்குவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அமைதி மற்றும் ஒற்றுமையை நோக்கிச் செயல்படுவதற்குப் பதிலாக, சில குழுக்கள் தங்கள் சொந்த நலன்களுக்காகப் பிரிவினையைத் தூண்டி விட்டன.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குழுக்களை ஆதரிக்கும் கனடாவின் வரலாறு, உலகளாவிய பயங்கரவாதம் குறித்த அதன் நிலைப்பாடு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகிறதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...

பியூமியின் மகன் கைது

ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக வெலிக்கடை பொலிஸாரால் பியூமி ஹன்சமாலியின்...