ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை தற்போது 23 ஆக அதிகரித்துள்ளது.
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று (11) காலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருநாகல் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதேவேளை, குறித்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்து வர இரண்டு ஹெலிகொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இரத்மலானை விமானப்படை தளத்தில் இந்த இரண்டு ஹெலிகொப்டர்களையும் விமானப்படை தயார் நிலையில் வைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.