இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா தொடர்பாக ஊடகங்களில் வெளியான அறிக்கைகளை வலு அமைச்சின் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாட்டு செல்லத் திட்டமிட்டுள்ளமை காரணமாக தனது விடுப்பு தொடர்பாக அறிவிக்கும் கடிதத்தை ஜனாதிபதியிடம் சியம்பலாபிட்டிய கையளித்ததாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறியுள்ளார்.