நிதி மோசடி வழக்குகள் தொடர்பான ஏழு நிலுவையில் உள்ள பிடியாணைகள் தொடர்பாக, இலங்கை நடிகை சேமினி இடமல்கொட, இன்று (மே 11) ஞாயிற்றுக்கிழமை வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சட்ட அமலாக்க நிறுவனங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளைத் தொடர்ந்து இடமல்கொட கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த பிடியாணைகள் நிதி முறைகேடு தொடர்பான பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவையாகும்.