உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு வண்ணாத்திவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் திருவுளச்சீட்டின் மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வண்ணாத்திவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு வண்ணாத்திவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு திருவுளச்சீட்டு குழுக்கி போடப்பட்டது.
இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வண்ணாத்திவில்லு பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 4 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது