Date:

பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலைகள் உள்நாட்டு சந்தையில் அதிகரிப்பு

கறுவா, மிளகு, சாதிக்காய், கிராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்துள்ளன.

அதேநேரம் நாட்டில் டொலருக்கான பற்றாக்குறை நிலவிய போதிலும் கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த பொருட்களின் ஏற்றுமதிகள் ஊடாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு கிலோவொன்றின் விலையானது தற்போது 900 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, கறுவா ஒரு கிலோகிராம் 3,400 ரூபாவாகவும், கிராம்பு ஒரு கிலோகிராம் 1,400 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

அத்துடன், ஒரு கிலோகிராம் கோப்பி 1,250 ரூபாவாக அதிகரித்துள்ளதோடு, ஒரு கிலோ பாக்கு 1,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக ஏற்றுமதி விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மிளகு, கறுவா, கிராம்பு உள்ளிட்ட பிரதான பயிர்கள் 45,000 மெட்ரிக் டன் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...