Date:

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

‘ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை தடுக்க, புதிய ஒப்பந்தத்தை கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

மேலும், அணு ஆயுத உற்பத்திக்கு தடை விதிக்கும் ஒப்பந்தத்திற்கு உடன்பட மறுத்தால், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பகிரங்க எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

தற்போது ஈரானுடன் வர்த்தக உறவு வைத்திருக்கும் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் சமூக வலைதளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் , ஈரான் எண்ணெய் அல்லது பெட்ரோ இரசாயன பொருட்களின் அனைத்து கொள்முதல்களும் இப்போதே நிறுத்தப்பட வேண்டும்.

ஈரானில் இருந்து எந்த அளவு எண்ணெய் அல்லது இரசாயனங்களை வாங்கினாலும், அந்த நாடு அல்லது நபர் உடனடியாக இரண்டாம் நிலை தடைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அவர்கள் அமெரிக்காவுடன் எந்த வகையிலும், வணிகம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்படும். என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு சஜித் இறுதி அஞ்சலி

வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்...

பிக் டிக்கெட் வென்ற இலங்கையர்

அபுதாபி வாராந்திர பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் 63 வயதான வங்கியாளரான...

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில்...