Date:

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்

இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 293 ரூபாவாகும்.

361 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 341 ரூபாவாகும்.

286 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 274 ரூபாவாகும்.

331 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 178 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உலகக் கிண்ண சூப்பர் 8 ஆரம்பம்: நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி!

இலங்கையின் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று ( 21) நடைபெறும்...

சோமாவதிய புனித பூமி நீரில் மூழ்கியது

சோமாவதிய - சுங்காவில வீதி இன்று (21) முற்பகல் சுமார் ஒரு...

தங்கம் விலையில் மாற்றம்!

நாட்டின் தங்கத்தின் விலையில் சுமார் 4,000 ரூபா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தைத்...

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...