Date:

மாணவர்களுக்கு சிங்கப்பூரில் சந்தர்ப்பம்

இலங்கை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டப்பின் படிப்பிற்க்கான புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட உயர்கல்விக்கான ஒத்துழைப்புக்களை உருவாக்குவதற்காக, உலகளாவிய ரீதியில் தரப்படுத்தப்பட்ட பல்கழைக்கழகங்களில் முதல்நிலையை வகிக்கின்ற சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம்  (National University of Singapore) (NUS)  மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதன் மூலம், இலங்கை மாணவர்களுக்கு சிங்கப்பூரின் தேசிய பல்கழைக்கழகத்தில் கலாநிதிப்பட்டம் உள்ளிட்ட பட்டப்பின் படிப்புக்களை மேற்கொள்வதற்கும் இயலளவு விருத்தி நிகழ்ச்சி திட்டங்களில் பங்கெடுப்பதற்கும் ஒருங்கிணைந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும் .

குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி,உயர்கல்வி, மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை...

நிஷாந்தவுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC)...

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...