பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, டிக்வெல்லவிலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, எதிர் திசையில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பேருந்துடன் மோதியது.
விபத்தில் காயமடைந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் தங்காலை மற்றும் பெலியத்த வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெலியத்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.