Date:

கிராண்ட்பாஸ் பெண் கொலையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் 65 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரை கொலை செய்து சடலத்தை துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட பெண் தனது இரண்டாவது கணவர், மகள் மற்றும் மருமகனுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதோடு 25 வயதுடைய இளைஞனுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தகாத உறவு குறித்து பெண்ணுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடந்த பின்னர் பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் இணைந்து சடலத்தை துண்டுகளாக வெட்டி அதனை 03 உரைப் பைகளில் போட்டு ஆற்றில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களான இரண்டாவது கணவரும் மருமகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பதுளை மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

பதுளை மாவட்டத்தில் இன்று (09) காலை முதல் மீண்டும் கனமழை பெய்யத்...

எஞ்சியுள்ள உயர்தரப் பரீட்சை மீள் ஆரம்பத் திகதி இதோ!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

பாடசாலைகள் ஆரம்பத் திகதி அறிவிப்பு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில்...

கொத்மலை நீர்த்தேக்கத்தின் முக்கிய அறிவித்தல்!

இந்த நாட்களில் மீண்டும் மழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்...