பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் அஜித், பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பத்ம விருதுகள் பெற்றவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, விருதுகள் மற்றும் சான்றிதழை கொடுத்து கௌரவித்தார். அதன்படி நடிகர் அஜித்குமார் பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்று கொண்டார்.
நடிகர் அஜித், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட தமிழகத்தை சேர்ந்தர்வர்கள் பத்ம விருதுகளை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.