Date:

புத்தளம் மாநகர சபையின் அதிகாரத்தினை தீர்மானிக்கப் போகும் சக்தியாக இரட்டைகொடி சின்னமே இருக்கப்போகின்றது-கள ஆய்வில் கண்ட உண்மை

 

( உப்பளத்தான் )

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலானது குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு மிகவும் முக்கியமானதொன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக புத்தளம் மாநாகர சபை என்பது புத்தளம் மக்களுக்கு மிகவும் முக்கியமானது ஏன் என்பது தொடர்பில் புத்தளம் மக்களாகிய நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளதை முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

நாம் யாருக்கும் வாக்களித்து என்ன பலன் இருக்கின்றது என்று தமது பெறுமதியான வாக்கினை பயன்படுத்தாமல் இருந்து விடாதீர்கள் என்ற தாழ்மையான வேண்டுகோளினை முன் வைக்கவிரும்புகின்றேன்.

இனி விடயத்துக்குள் செல்வது பொறுத்தமாகும்,அதாவது தற்போது தபால் மூல வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளது.
வாக்குகளை அரச அதிகாரிகள் அளித்துவருகின்றனர்.இந்த நிலையில் புத்தளம் மாநகர சபையின் அதிகாரம் எதற்காக இரட்டைக் கொடி சின்னத்தின் இஷாம் மரைக்காரை முதன்மை வேட்பாளராக கொண்டிருக்கின்ற அணிக்கு கொடுக்க வேண்டும்,
இதற்கான நியாயங்கள் என்ன என்பது பற்றி உங்களுக்கு விளக்கப்படுத்துவது பொறுத்தமாக இருக்கும் என கருதியதாலும் புத்தளம் சமூகத்தின் பாதுகாப்பு,அபிவிருத்தி என்பனவற்றை தக்க வைத்துக் கொள்ளுவதற்கான சந்தர்ப்பமாக இதனை நோக்குவது பெறுத்தமாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஊழலற்ற ஆட்சியொன்று தேவை என்று மக்கள் சிந்தித்தமையினால் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு வாக்களித்து அனுர குமார திசாநாயக்க அவர்களை ஜனாதிபதியாக ஆக்கினீர்கள்.


அதன் பிற்பாடு நான் ஜனாதிபதியாக இருந்தால் போதாது பாராளுமன்ற அதிகாரமும் வழங்கினால் மேடைகளில் சொன்ன விடயங்களை நடைமுறைப்படுத்த முடியும் என்று கூறியதினாலும் அதே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து 159 ஆசனங்களை கொடுத்தோம்.இந்த பாராளுமன்ற தேர்தலிலும் புத்தளம் மாவட்டத்தை பிரதி நிதித்துவம் செய்யும் வகையில் இரட்டைக் கொடி சின்னத்தில் இஷாம் மரைக்கார் தலைமையில் வேட்பாளர்கள் உங்களது வீடுகளுக்கு வந்தமையினை பலரும் வரவேற்றதுடன்,வாக்குகளையும் அளித்தீர்கள்.

நீங்கள் இரட்டைக் கொடிக்கு வாக்களித்ததன் மூலம் புதியதொரு அரசியல் பாதையினை தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியினை பார்க்க முடிந்தது, மட்டுமல்லாமல் புத்தளம் மக்கள் தமக்கான தனியானதொரு அரசியல் பயணத்தினை இட்டுள்ளார்கள் என்பதையும் தேர்தலின் பின்னரான பதிவுகளில் இருந்து கண்டு கொள்ள முடிந்த உண்மையாகும்.

இவ்வாறு மக்களின் விருப்பத்தை முன்னெடுத்துச் செல்வது இஷாம் மரைக்கார் என்கின்ற ஆளுமையின் முக்கிய பொறுப்பு என்பதை அவர் உணர்ந்திருந்ததினால் தான் இந்த உள்ளுராட்சி தேர்தலிலும் புத்தளம் மாநகர சபைக்கு அவரது தலைமையில் வேட்பளார்களை நிறுத்தியுள்ளார்.

இஷாம் மரைக்கார் என்பவர் தனித்துவ சிந்தணையுடன் புத்தளம் மக்களை அரசியல்,பொருளாதர,கல்வி போன்ற விடயங்களில் வழிகாட்ட பொறுத்தமானவர் என்பதை அவரது செயல்களில் இருந்து காணமுடிகின்றது.

எதிர்கால தலைமைத்துவங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றால் அவர்கள் கிணற்று தவலைகளாக புத்தளம்மில்லாத வேறு தலைமைத்துவங்கள் சொல்லுகின்ற சொல்லுக்கு தலையாட்டிகளாக இருக்காமல் புத்தளம் சமூகத்தின் யதார்த்தினை புரிந்து துணிந்து செயற்படும் ஒரு இளம் தலைமையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயலாற்றும் ஒருவர் என்பதினால் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுகின்ற அரசியல் தலைவராக இன்று இஷாம் மரைக்கார் அவர்களை புத்தளத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் இதற்கான அங்கீகாரத்தினை தெரிவித்துவருகின்றமையினை காணமுடிகின்றது.

புத்தளம் நகர எல்லைக்குள் மட்டுமல்லாமல் சூழவுள்ள அனைத்து பிரதேசங்களிலும் இஷாம் மரைக்காரின் சேவைகள் சென்றுள்ளது.
குறிப்பாக கல்வி,விளையாட்டு துறைகளில் சிறந்த ஆலோசனைகளையும்,பல்வேறுபட்ட உதவிகளையும் அரசியல் பதவியில்லாத போது முன்னின்று செய்துகாட்டியுள்ளார்.

குறிப்பாக இஷாம் மரைக்காரின் ஆழமான நம்பிக்கையாக புத்தளம் ஆளப்பட தகுதியானவர்கள் புத்தளம் மக்களே இந்த தலைமையினை தேர்ந்தெடுக்கும் உரிமையும் புத்தளத்து வாக்காள மக்களுக்கே உண்டு என்ற தாராக மந்திரத்தினையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் பகிரங்கமாக தெரிவித்துவருகின்றமை அவரது புத்தளம் மக்களின் விடுதலைக்கான அடித்தளம் என்பதை மிகவும் எளிதாக புரிந்துகொள்முடிகின்றது.

இதற்கிடையில் பிரித்தாழும் அரசியல் கலாசாரமும் புத்தளத்துக்குள் வலிந்து கொண்டுவரப்பட்டுள்ளதின் ஆபத்தும் புத்தளம் மக்கள் உணராமல் இல்லை என்ற செய்தியினையும் நாம் இங்கு சொல்லியாக வேண்டும்.
இதனது ஆபத்து தலைமீறி போயுள்ள நிலையில் இவ்வாறான சக்திகளுக்கு கடிவாளம் பேடுவது என்றால் புத்தளம் மக்கள் துணிந்த,நேர்மையான,அறிவு சார்ந்த தமது பிரதி நிதிகளை புத்தளம் மாநகர சபைக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

தான் சொல்லுவதை செய்து காட்டும் அது போன்று எதிர்கால சிறந்த திட்டங்களை தன்னகத்தே கொண்டுள்ளவராக இஷாம் மரைக்கார் காணப்படுகின்றார்.
அவர் புத்தளம் மக்களுக்கு ஆற்றியுள்ள பணிகளை ஆதாரங்களாக நாம் எடுத்து கூறலாம்.
புத்தளம் நகர சபையாக இருந்த போது மர்ஹூம் பாயிஸ் அவர்கள் செய்து காட்டிய ஆட்சிமுறை என்பது இன்னும் மக்கள் மத்தியில் பசுமரத்தாணி போல இருக்கின்றது என்ற உண்மையினை சொல்லியாக வேண்டும்.
அவரது சகல துறை பணிகளை இன்றும் மக்கள் நினைவு கூறுகின்றனர்.இதனை செயற்படுத்த அவரின் நிழலாக இஷாம் மரைக்கார் மட்டுமே புடம் போடப்பட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் களத்தில் நிற்கின்ற கட்சிகளும்,குழுக்களும் புத்தளத்திற்கான திட்டங்களை உரிய முறையில் முன் வைக்கவில்லை,அவர்கள் சார்ந்து நிற்கின்ற கட்சியின் தலைமை என்ன சொல்லுகின்றதோ அதனை மட்டுமே அவர்களால் செய்ய முடியும் என்ற விடயத்தினை நாம் அறிவோம்.இவ்வாறு கட்சிகளின் தலைமைகளை நம்பியவர்களின் இன்றைய நிலையினையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆளும் கட்சியின் அதிகாரம் மட்டும் இருந்தால் புத்தளம் நகரத்தை அபிவிருத்தி செய்ய முடியும் என்று பேசுகின்ற கிழிப்பிள்ளைகள்,தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமைகள் மட்டுமல்லாமல் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் இன்று தலைகீழாக போய்விட்டதை அன்றாடம் மக்கள் பேசுகின்றதில் இருந்து அறிந்து கொள்ளமுடிகின்றது.
தன் பிடித்தத முயலுக்கு மூன்று கால்கள் என்று வாதிடும்,கட்சிகளின் மாயையில் மயங்கி கிடக்கின்ற கூட்டத்துக்கு மத்தியில் புத்தளம் மக்களினால் பொறுத்தமற்ற தலைமைகள் என்று ஒதுக்கப்பட்டு,ஒரங்கட்டப்பட்டவர்களின் நிலைப்பாடுகள் எல்லாம் இந்த தேர்தலில் சரிந்துவிடும் என்பதை மக்கள் கருத்து கணிப்புக்களில் உள்நோக்கி சென்று பார்க்கின்ற போது புலனாகின்றது.
இந்த தேர்தல் களத்தில் புத்தளம் மாநகர சபைக்கு தகுதி வாய்ந்த வெற்றி அணியாகவும்,தீர்மாணிக்கும் அணியாகவும் இஷாம் மரைக்கார் தலைமையிலான இரட்டைக் கொடி சின்ன அணியினரே இருக்கப் போகின்றார்கள் என்பதும் தற்போதைய அரசியல் கள நிலவரப்படி பெறப்பட்டுள்ள தரவுகளின் பதிவாகவுள்ளது.
இன்னும் சில நாட்கள் தேர்தலை நோக்கி நகர்கின்ற போது புதிய சிந்தணைகளுடன் இளைஞர்கள் முன்னோக்கி பயணிக்கப் போகின்றார்கள் என்பதும்,தற்போது சுயேட்சைகளாகவும்,பல கட்சிகளில் ஏன் நின்கின்றோம்,கட்சிகளுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் யார் பேரம்பேசப் போகின்றார்கள் என்ற விடயத்தினையும் புத்தளம் மக்கள் உணர ஆரம்பித்துள்ள நிலையில் புத்தளம் மாநகர சபையின் அதிகாரத்தை இஷாம் மரைக்கார் தலைமையிலான இரட்டைக் கொடி சின்னத்திற்கு வழங்கும் தீரமானத்தினை புத்தளத்து இளைஞர் சமூகமும்,மக்களும் எடுத்துள்ள செய்தி எமது காதுகளுக்குள் எட்ட ஆரம்பித்துள்ளது.
அன்று அவர் விட்டு சென்றதை இன்று முன்னெடுக்கும்,துணிவும்,அரசியல் ஆளுமையும் கொண்ட இஷாம் மரைக்கார் தலைமையிலான அணிக்கு மட்டுமே உண்டு என்பதை புத்தளம் சமூகம் நிரூபிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற எதிர்வு கூறலை இங்கு விதைப்பது பொறுத்தமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கச்சதீவு சர்வதேச சட்டங்களின்படி இலங்கைக்கே சொந்தமானது

சர்வதேச சட்டங்களின்படி கச்சதீவு இலங்கைக்கே சொந்தமானது என்றும், அந்த விடயம் குறித்துப்...

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய மீலாதுன் நபி விழா!

தேசிய மீலாதுன் நபி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்...

தங்காலை நகர சபைக்கு, பிரதமர் ஹரிணி

எல்ல - வெல்லவாய பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் இறுதி அஞ்சலிக்காக...

இரத்மலானை அனாதை இல்ல குழந்தைகளுக்கு ஈரான் தூதுவர் உதவி

ஈரான் நாட்டின் இலங்கைத் தூதுவர் Dr.அலி ரேஷா டெல்கோஷ் Dr. Ali...