Date:

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் 26 பெண் கைதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், நேற்றிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

குறித்த அமைதியின்மை சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஈரானில் உலகப் பாரம்பரியத் தளம் சேதம் – UNESCO கவலை!

யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட, தெஹ்ரானில் உள்ள...

போர் பதற்றத்தால் தங்கத்தின் விலையில் பாரிய ஏற்றம்

சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்கள்...

குமார் சங்கக்காரவின் தந்தை காலமானார்

உலகப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் தந்தை வழக்கறிஞர் எஸ்.கே. சங்கக்கார காலமானார். அவரது உடல்...

14 நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற அவசர எச்சரிக்கை; ரியாத்திலுள்ள தூதரகத்தின் மீதும் தாக்குதல்

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு...