நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் திங்கட்கிழமை (21) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய்கள் உட்பட 22 பேர் காயமடைந்துள்ளனர் என கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இராணுவ சிப்பாய்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த பஸ் சாரதியும் அதில் பயணித்த 21 இராணுவ சிப்பாய்களும் சிகிச்சைக்காக வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.