இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டின் உயிர்த்த ஞாயிறு தினத்தில் நிகழ்ந்த குண்டுத் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
திருமலையில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் கூறியதை போன்று செயற்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் தொடர்பாக அநியாயமாக கைதானவர்கள் விடுவிக்கப்பட்டு சரியான விமோசனம் கிடைக்க வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம் எனவும் தெரிவித்தார்.