மலரும் விசுவாவசு வருடம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் வருடமாய் அமைய நியூஸ் தமிழின் வாழ்த்துகள்…
2025 சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு இன்று அதிகாலை 03:21 மணிக்கு சுப நேரத்தில் உதயமாகி உள்ளது.
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளை தமிழ் புத்தாண்டாக நாம் கொண்டாடுகிறோம். தமிழ் புத்தாண்டு, தமிழ் வருடப் பிறப்பு, சித்திரை பிறப்பு, சங்கராந்தி என பல பெயர்களால் இது கொண்டாடப்பட்டு வருகிறது.
சித்திரை மாதம் என்பது சூரிய பகவான் தனது ஓராண்டு பயணத்தை நிறைவு செய்து, மீண்டும் புதிய பயணத்தை துவங்கும் நாளாகும். இந்த நாளில் தான் பிரம்ம தேவர் உலக உயிர்களை படைக்க துவங்கியதாக சொல்லப்படுகிறது. சூரிய பகவான், மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளிலும் தனது பயணத்தை நிறைவு செய்வதை ஒரு ஆண்டு என்கிறோம்.
விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14/04/2025 அன்று அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் நுழையும் பொழுது பிறந்துள்ளது.